நேற்று இரவு நடைபெற்ற இவ்வாண்டு ஐ.பி.எல். தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ஜெய்ப்பூரில் தொடர்ந்து 7 வெற்றிகளைப் பெற்றிருந்த தொடர்ச்சியை தினேஷ் கார்த்திக்கின் அணி முறியடித்துள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானிக்க, ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது.
இதன்படி ஆடிய ராஜஸ்தான் அணி அணித்தலைவர் ரஹானே மற்றும் ஷோர்ட்டின் சிறப்பான ஆரம்பத்தின் உதவியுடன் 8 விக்கட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஷோர்ட் 44 ஓட்டங்களையும், ரஹானே 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பட்லர் அதிரடியாக 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகியோர் மிக சிக்கனமாக பந்துவீச ,
நிதிஷ் ரானா மற்றும் டொம் கரன் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, வெறும் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 18.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
நிதிஷ் ரானா மற்றும் டொம் கரன் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, வெறும் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 18.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுனில் நரைன் 35 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா அதிரடியாக 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் ஆடிய ரானா 35 ஓட்டங்களையும், தினேஸ் கார்த்திக் வெறும் 22 பந்துகளில் 42 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இந்த வெற்றியுடன் 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக சகலதுறையிலும் பிரகாசித்த நித்தீஷ் ராணா தெரிவானார்.
நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக சகலதுறையிலும் பிரகாசித்த நித்தீஷ் ராணா தெரிவானார்.
0 கருத்துகள்