Ball tampering சர்ச்சை காரணமாக டரன் லீமன் பதவி விலகியதை அடுத்து அவுஸ்திரேலிய அணி தன்னுடைய புதிய பயிற்றுவிப்பாளர் யாரென்பதை வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளது.
மும்முனைப் போட்டியாக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்களுக்கு இடையே - ஜஸ்டின் லங்கர், ஜேசன் கில்லெஸ்பி, ரிக்கி பொன்டிங் - தெரிவுப் போட்டி இருக்கும் என்று பரவலான ஊகங்கள் இருந்தன.
எனினும் முன்னாள் துடுப்பாட்டப் பயிற்சியாளராகக் கடமையாற்றிய முன்னைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லங்கரே நியமனம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை கிரிக்கெட் அவுஸ்திரேலியா மறுத்துள்ளதுடன் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துகள்