Latest Updates

6/recent/ticker-posts

சஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் ! முந்தப்போவது யார்? #IPL2018

IPL 2018இன் 13 போட்டிகள் நடந்துமுடிந்திருக்கும் நிலையில் துடுப்பாட்ட வீரர்களில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சஞ்சு சம்சனும் பந்துவீச்சாளர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைனும் இப்போது முன்னிலை பெற்றுள்ளார்கள்.

அதிக ஓட்டங்களைப் பெறுபவருக்கான செம்மஞ்சள் தொப்பி இப்போது சம்சனின் வசமுள்ளது.
அதிரடியாக ஓட்டங்களைக் குவித்துவரும் அன்றே ரசல் அவரைத் துரத்திக்கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளார். ரசல் தவிர முதல் ஐந்து இடங்களில் உள்ள அனைவரும் இந்திய வீரர்களே.



பந்துவீச்சாளர் பட்டியலில் இப்போது  அதிக விக்கெட்டுக்களுடன் ஊதா நிறத் தொப்பியை கொல்கத்தாவின் சுனில் நரைன் வைத்துள்ளார். அவர் கைப்பற்றியுள்ள அதேயளவு 7 விக்கெட்டுக்களையே மும்பாயின் இளம் சுழல்பந்து அதிசயம், இந்தத் தொடரின் ஆச்சரியமிக்க அறிமுகம் மயங் மார்க்கண்டே கைப்பற்றியிருந்தாலும் சராசரியை குறைவாகக் கொண்டுள்ள நரைன் தொப்பியை வசப்படுத்தியுள்ளார். மூன்றாம் இடத்திலுள்ள பெங்களூரின் கிறிஸ் வோக்ஸ்சும் 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளனர்.



முழுமையான முன்னிலை விபரங்கள்...


கருத்துரையிடுக

0 கருத்துகள்