Latest Updates

6/recent/ticker-posts

சாதனை வெற்றியுடன் சரித்திரத் தொடர் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா

48 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆபிரிக்கா அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தனது நாட்டில் வைத்து டெஸ்ட் தொடர் வெற்றியொன்றைத் தனதாக்கியுள்ளது.
படம் : espncricinfo.com

நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 492 ஓட்டங்களால் அபாரமான வெற்றியை இன்று பெற்று 3-1 என்று தொடரை வசப்படுத்திக்கொண்டது தென் ஆபிரிக்கா.

612 என்ற மிகப் பெரிய இலக்கை நோக்கித் துடுப்பாடிய அவுஸ்திரேலியா போட்டியின் இறுதி நாளான இன்று வேர்னன் பிலாண்டரின் பந்துவீச்சில் 119 ஓட்டங்களுக்குச் சுருண்டு போனது.

இந்த வெற்றி டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்ட வித்தியாசத்தால் பெறப்பட்ட நான்காவது மிகப்பெரிய வெற்றி என்பதுடன் தென் ஆபிரிக்காவின் மிகப்பெரிய வெற்றியாகவும் அமைகிறது.

6 விக்கெட்டுக்களை வீழ்த்திய பிலாண்டர் போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய ககிஸோ றபாடா தொடர் நாயகனாகத் தெரிவானார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்