கிரிக்கெட்டின் பிறப்பிடம் இங்கிலாந்து மிக நீண்டகாலமாக பாரம்பரிய கிரிக்கெட்டோடு ஊறி வளர்ந்த ஒரு நாடு. கிரிக்கெட்டில் மாற்றங்கள் ஏற்படுத்திடுவதை பெரிதாக விரும்பாத இறுக்கமான ஒரு சமூகமாகவே தன்னைக் காட்டிவந்தாலும் 50 ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ணப் போட்டிகள் முதல் அண்மைய Twenty 20 போட்டிகள் வரை இங்கிலாந்தில் தான் உருவானது என்பது வரலாறு.
இப்போது மாறிவரும் ரசனைகளின் அடிப்படையில் புதிய, இளம் கிரிக்கெட் ரசிகரை இன்னும் அதிகமாக ஈர்க்கும் எண்ணத்துடன் புதிதாக 100 பந்து துரித கிரிக்கெட் என்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தவுள்ளார்கள்.
2020இல் அறிமுகப்படுத்த எண்ணியுள்ள 8 அணிகள் விளையாடவுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புதிய கிரிக்கெட் தொடரை அணிக்கு 100 பந்துகளைக் கொண்டதாக நடத்தலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை - ECB தீர்மானித்துள்ளது.
வழமையானது போல 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் அதைத் தொடர்ந்து 10 பந்துகள் கொண்ட விசேட ஓவருமாக இந்தப் போட்டி நடைபெறும்.
இதன் மூலம் 3 மணி நேரத்துக்குள் ஒரு போட்டியை நடத்தி முடிக்கலாம்.
2003 இல் ECB யால் அறிமுகப்படுத்தப்பட்ட Twenty 20க்கு பிறகு இதுவே பெரிய புரட்சியாக அமையவுள்ளது.
இப்போதைக்கு அநேக பிராந்திய கிரிக்கெட் சபைகளின் ஆதரவு கிட்டியிருந்தாலும், கிரிக்கெட் விதிகளை அங்கீகரிக்கும் MCC என்ன சொல்லும் என்பதை அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர்.
இதேவேளை ரசிகர்கள் ஏற்கெனவே 20 ஓவர்கள் கொண்ட Twenty 20 போட்டிகளே 120 பந்துகள் என்றளவில் குறைவாகத் தானே இருக்கு? அது இருக்க மேலும் 20 பந்துகளைக் குறைத்து இன்னொரு வகைப்போட்டி எதற்கு என்றும் குழப்பத்துடன் இருக்கிறார்கள்.

0 கருத்துகள்