Latest Updates

6/recent/ticker-posts

தடை தாண்டிய வேகப்புயல் ! 3வது டெஸ்ட்டுக்குத் திரும்பும் றபாடா

மைதானத்தில் அநாகரிகமாகவும் ஒழுக்கவீனமாகவும் எதிரணி வீரர்களுடன் மோதும் விதமாகவும் நடந்துகொண்ட காரணத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு டெஸ்ட் போட்டித் தடைக்கு உள்ளாகியிருந்த தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ றபாடா, அந்தத் தடையிலிருந்து விலக்குப் பெற்றுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற சம்பவங்களை அடுத்து நன்மதிப்புப் புள்ளிக் குறைப்போடு இந்தப் போட்டித் தடையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா இதற்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தது.

நேற்று 6 மணி நேரம் இந்த மேன்முறையீடு பற்றி நடந்த விசாரணைகளை அடுத்து இன்று றபாடாவுக்கு தடை நீக்கம் வழங்கப்படுவதாக ICC அறிவித்துள்ளது.
இதையடுத்து அடுத்த வாரம் இடம்பெறும் கேப்டவுண் டெஸ்ட் போட்டியில் றபாடா விளையாடவுள்ளார்.

எனினும் தண்ட அறவீடும், நன்னடத்தைப் புள்ளிக் குறைப்பும் மாற்றப்படாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகுந்த உற்சாகத்தை வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்