தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Sunday, June 3, 2018

சச்சினின் வெறித்தனமான ரசிகருக்கு விருந்து வைத்து அசத்திய மகேந்திர சிங் தோனி !! - அரிய புகைப்படங்களுடன்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுதிர் கௌதம் என்ற பெயர் மிகப் பரிச்சயமானது. சச்சின் டெண்டுல்கரின் வெறித்தனமான ரசிகர்.
சச்சினின் எந்தவொரு போட்டியிலும் இவரை நாம் கண்டிருப்போம்.


அத்துடன் சச்சினின் ஓய்வின் பின்னர் இந்திய அணியின் எந்த ஒரு போட்டியையும் இவர் தவறவிட்டதில்லை. இந்திய அணியின் கொடியையும், சச்சினின் பெயர் மற்றும் இலக்கத்தையும் வரைந்து கொண்டு இந்திய அணிக்கு தனது ஆதரவை வழங்குவார்.

அதுமாத்திரமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாத்திரமின்றி சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடனும் நெருக்கமாக பழகக்கூடியவர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீfரித்து சில நாட்களே ஆகும் நிலையில், CSK தலைவர் தோனி  சுதீர் கௌதமை தன்னுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்து அவருக்கு பகல் உணவு விருந்து அளித்துள்ளார். தோனியின் குடும்பம் சேர்ந்து கௌதமை வரவேற்றுள்ளது.இதனை புகைப்படம் எடுத்துள்ள சுதீர் கௌதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தோனிக்கும், தோனியின் மனைவி ஷாக்ஷிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'Words can't describe the moments spent. Thanks to MS Dhoni and Sakshi,'
என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

- கிரு 

படங்கள் : tupaki.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...