சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு T20 தொடரின் 2வது போட்டியில் சர்வதேச T20 தரப்படுத்தலில் முதலிடத்தை வகிக்கும் பாகிஸ்தான் அணியை, அவுஸ்திரேலிய அணி பந்தாடியுள்ளது.
இதன்மூலம் 8 சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவந்த பாகிஸ்தானின் தொடர் வெற்றிகளுக்கு அவுஸ்திரேலியா முற்றுப்புள்ளி இட்டுள்ளது.
சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் T20 முக்கோணத் தொடர் நேற்று ஆரம்பமாகியது. முதல் போட்டியில் சிம்பாப்வேயை வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இன்று அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
இங்கிலாந்து அணியிடம் 5 ஒருநாள் மற்றும் ஒரு T 20 எனத் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிவந்த ஆஸி அணியின் பந்து வீச்சு போட்டியை பிரகாசப்படுத்தியது.
முக்கியமாக உயரமான வீரர் பில்லி ஸ்டான்லேக் தன்னுடைய எகிறும் பந்துகள் அதே போல அதிவேகப் பந்துவீச்சு மூலம் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களை திணறடித்தார்.
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மொஹமட் ஹபீஸ் பூஜ்ஜியம், ஃபக்கார் சமான் 6 ஓட்டங்கள், ஹுசைன் டலாத் 10 ஓட்டங்கள் மற்றும் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் 4 ஓட்டங்கள் என அனைவரையும் தனது வேகத்தால் ஸ்டான்லேக் அடுத்தடுத்து வெளியேற்றினார்.
ஸ்டான்லேக்கின் பந்துவீச்சுப் பெறுதி - 4-0-8-4 !!
தொடர்ந்து களமிறங்கிய சொயிப் மலிக் துரதிஷ்டவசமாக 13 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். எனினும் அடுத்ததாக களமிறங்கிய ஷடாப் கான் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடினர்.
ஷடாப் கான் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கலாக 29 ஓட்டங்களையும், பஹீம் அஸ்ரப் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஷடாப் கானை அன்றூ டை வெளியேற்ற, பஹீம் அஸ்ரப்பை ரிச்சட்சன் வெளியேற்றினார்.
அடுத்தடுத்து விக்கட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அவுஸ்திரேலிய அணியின் பந்து வீ்ச்சில் ஸ்டான்லேக் 4 விக்கட்டுகளையும், டை 3 விக்கட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினார்.
இந்நிலையில் பெறக்கூடிய வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கினை அடைந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷோர்ட் மாத்திரம் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஏரோன் பின்ச் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை திணறடித்தார்.
இவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும், டிரவிஸ் ஹெட் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, அவுஸ்திரேலிய அணி வெறும் 10.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய அணியின் பில்லி ஸ்டான்லேக் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றி அவுஸ்திரேலியாவின் இளைய, அனுபவம் குறைந்த அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் உற்சாகமும் தந்திருப்பதாக ஏரோன் பின்ச் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

0 கருத்துகள்