ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக, கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரிலும் அவுஸ்ரேலிய அணி விளையாடுவதாக இருந்தது.
ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்திற்கொண்டு குறித்த போட்டித் தொடர்களை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிரிக்கட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
எனினும், இத்தொடர்களை நடத்துவதற்கான மாற்று திகதி தெரிவு செய்வதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் சபைகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கிரிக்கட் அவுஸ்ரேலியா குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துகள்