தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Friday, June 1, 2018

ICC தரப்படுத்தலில் இணைந்த புதிய நான்கு அணிகள் !! இனி போட்டித்தன்மை கூடும்?

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள புதிய தரப்படுத்தல் அட்டவணையில் வழமையாகப் பட்டியலிடப்படுகின்ற 12 அணிகளுக்கு மேலதிகமாக நான்கு புதிய அணிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற உலகக்கிண்ணத் தகுதிப் போட்டிகள் மற்றும் WCL போட்டிகளின் மூலம் ஒருநாள் அந்தஸ்தைப் பெற்ற நாடுகளான ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகியனவே அவை.

இந்தப் புதிய தரப்படுத்தல் பட்டியலின் படி 13ம், 14ம் இடங்களை முறையே ஸ்கொட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அணிகள் பிடித்துள்ளன. எனினும் 15ம், 16ம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இடங்களை பிடிப்பதற்கு நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகள் இன்னும் நான்கு போட்டிகளில் விளையாட வேண்டும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நான்கு அணிகளும் இனி ஏனைய அணிகளுக்கு எதிராகவும் தமக்குள்ளும் விளையாடும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் புள்ளிகளிலும் தரநிலைகளிலும் கணிசமான மாற்றங்களை உருவாக்கும்.

இதேவேளை இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் தரவரிசை பட்டியலின் முதலிடத்தை இங்கிலாந்து அணி பிடித்துள்ளதுடன், இரண்டாவது இடத்தை இந்தியாவும், மூன்றாவது இடத்தை தென்னாபிரிக்காவும் பிடித்துள்ளன.

முழுமையான பட்டியல் விபரங்கள் :


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...