4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் தான் முக்கிய காரணம் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வீரர் ஹர்பஜன் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அத்தோடு தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் இங்கிலாந்து சகலதுறை வீரர் மொயின் அலி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஆனால் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் 3 விக்கெட்டுக்களை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.
இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளருக்கு மைதானம் ஒத்துழைத்த நிலையில், அஷ்வினின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமைதான் தோல்விக்கு காரணம் என்று ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ''சவுத்தாம்ப்டன் மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. குறிப்பிட்ட கரடு முரடான பகுதியில் பந்தை விழச் செய்வதன் மூலம் ஏராளமான விக்கெட்டுக்களை எடுத்திருக்க முடியும். அதை மொயின் அலி சரியாக செய்தார். இந்தியாவின் முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
4-வது டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தற்கு முக்கிய காரணம் அஷ்வினை விட மொயின் அலி சிறப்பாக பந்து வீசியதுதான். முதல் முறையாக இந்திய சுழற்பந்து வீச்சாளரை விட, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசியதை நான் பார்த்தேன். அஷ்வினால் விக்கெட் வீழ்த்த இயலாததே இந்தியா 3-1 எனத் தொடரை இழக்க முக்கிய காரணம்.
அஷ்வினின் இடுப்பு உபாதை எவ்வளவு கடுமையானது என்று எனக்குத் தெரியாது. அது எவ்வளவு முக்கியமானது என்று அணி நிர்வாகத்திற்கு கட்டாயம் தெரிந்திருக்கும். அவர் பூரண உடற்தகுதியுடன் விளையாடியிராவிட்டால் அது இந்திய அணிக்கு செய்யப்பட பெரிய துரோகமாகும்.
அவர் உடற்தகுதி பெற்றிருந்தால், அவரிடம் எதிர்பார்த்ததை வெளிப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டார்'' என்று கூறினார்.
முன்பும் பல தடவை அஷ்வினைப் பற்றி ஹர்பஜன் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்திருந்தமையும் இருவரது ரசிகர்களும் மட்டுமன்றி இவ்விருவருமே நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக வலைத்தளங்களில் மோதி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்