Latest Updates

6/recent/ticker-posts

முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்

 சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த டெஸ்ட் தரப்படுத்தல் சீராக்கங்களின் அடிப்படையில் தற்போது முதலிடத்தில் உள்ள இந்தியா மேலும் புள்ளி அதிகரிப்பைப் பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தில் தென் ஆபிரிக்கா தொடர்கிறது.

கடந்த ஆண்டில் டெஸ்ட் தொடர்களில் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் புள்ளிகளின் அதிகரிப்பு மற்றும் குறைவு ஏற்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன தலா ஐந்து புள்ளிகள் குறைந்துள்ளதுடன், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் தலா நான்கு புள்ளிகளை அதிகமாகப் பெற்றுள்ளன.

இதன் காரணமாக கிரிக்கெட் வரலாற்றில் முதற்தடவையாக பங்களாதேஷ் 9 ஆம் இடத்திலிருந்து 8ஆம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.

இதனால் முன்னொரு காலத்தில் முதலிடத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் தமது கிரிக்கெட் வரலாற்றின் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டு 9ஆம் இடத்துக்குக் கீழே வீழ்ந்துள்ளது. இப்போது பங்களாதேஷுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் 8 புள்ளிகள் வித்தியாசம்.


இந்த பத்து அணிகளுடன் இம்மாதம் பாகிஸ்தானுடன் தங்களது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள அயர்லாந்தும் , ஜூன் மாதம் இந்தியாவுடன் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தானும் சேர்ந்து கொள்ளவுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்