ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை, மும்பாய் இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், முதல் சிக்சரை அடித்த ரோஹித், IPL 2018 பருவகாலத்தில் 200வது சிக்சரை பதிவுசெய்தார்.
இதைத் தவிர, ஐ.பி.எல். போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். ரோஹித் சர்மா, 163வது போட்டியில் விளையாடி 179 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலையே சாரும். அவர் 102 போட்டிகளில் 269 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சுரேஸ் ரெய்னா உள்ளார். அவர் 163 போட்டிகளில் 174 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இப்போட்டியில், 52 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்களாக 94 ஓட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை G.பிரசாத்
சென்னை G.பிரசாத்
0 கருத்துகள்