ஷேன் வோர்னுக்குப் பதிலாக குமார் சங்கக்கார !!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார மீண்டும் நேர்முக வர்ணனையாளராக இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள முக்கியமான கிரிக்கெட் தொடருக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள், பின்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசத் தொடர் ஆகியவற்றில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு குழுமத்தின் நேர்முக வர்ணனையாளரில் ஒருவராக சேர்ந்துகொள்ள சங்கக்காரவுக்கு அழைப்பு வந்துள்ளது.

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்னுக்குப் பதிலாகவே சங்கா இங்கிலாந்து பயணிக்கவுள்ளார்.

இதற்கு முதலும் சங்கக்கார இங்கிலாந்தில் 2017இல் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின்போது நேர்முக வர்ணனையாளராகக் கடமையாற்றியிருந்தார்.

சங்கக்காரவுடன் இம்முறை முன்னாள் பிரபல வீரர்கள் இயன் பொத்தம், மைக்கேல் ஹோல்டிங், ரிக்கி பொன்டிங், நாசர் ஹுசேய்ன், மைக் அர்த்தர்ட்டன், வசீம் அக்ரம், கவர், ஹர்பஜன் சிங் ஆகியோரும் வர்ணனை செய்யவுள்ளனர்.

எனினும் இதே காலகட்டத்தில் நடைபெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக்கின் அறிமுகத் தொடரில் சங்கக்காரவினால் விளையாட முடியாமல் போகலாம் என்று கருதப்படுகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்களின் அடிப்படையில் சங்கக்கார முன்னதாக LPL இல் ஒரு அணியைத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.


கருத்துரையிடுக

புதியது பழையவை