அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கான கிரிக்கெட் சுற்றுலாவுக்காக பாகிஸ்தான் வீரர்களைத் தயார்ப்படுத்தும் பயிற்சிமுகாம் இப்போது நடைபெறுகிறது.
இதில் பங்குபற்றிவரும் 25 வீரர்களில் பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் இல்லை.
இதில் பங்குபற்றிவரும் 25 வீரர்களில் பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் இல்லை.
இது குறித்து பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் கருத்துத் தெரிவிக்கும்போது, "32 வயதாகும் வஹாப் ரியாஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக எந்தவொரு போட்டியையும் வென்று கொடுக்காத ஒருவர். அவரது பயிற்சிகளின் நேர்த்தி, விளையாடும் நேர்த்தி, அர்ப்பணிப்பு போன்றவற்றை கேள்விக்கு உட்படுத்த வேண்டும். பல இளையவர்கள் துடிப்பாக விளையாடுவதால் அவர்களைக் கவனித்து அணியை வெல்கின்ற ஒரு அமைப்பாக மாற்றவேண்டியது அவசியம்" என்றார்.
மிக்கி ஆர்தர் முன்பும் பல வீரர்கள் மீது - முக்கியமாக உமர் அக்மல்- இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
வயதும் ஏறியிருப்பதால் வஹாப் ரியாஸ் தன்னுடைய கிரிக்கெட்டின் அந்திம காலங்களில் இருப்பதாக எண்ணக்கூடியதாகவுள்ளது.
0 கருத்துகள்