தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 16 ஏப்ரல், 2018

மயிரிழையில் தோற்றது சென்னை !! தோனியின் போராட்டம் ஏமாற்றமானது ! #KXIPvCSK #IPL2018

ஐபிஎல் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு ஓட்டங்களினால் மயிரிழையில் வெற்றியை நழுவவிட்டது.

கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் பெறவேண்டிய சூழ்நிலையில் Finisher  ரசிகர்களால் புகழப்படும் அணித்தலைவர் தோனி ஆடுகளத்தில் இருந்தும் கூட சென்னை அணி நான்கு ஓட்டங்களால் தோல்வி கண்டது.
தோனி மோஹித் ஷர்மா வீசிய கடைசி ஓவரில் நான்காம், ஐந்தாம் பந்துகளில் எந்தவொரு ஓட்டமும் பெறமுடியாமல் போன தோனி கடைசிப் பந்தில் மிகப்பெரிய ஆறு ஓட்டம் ஒன்றை விளாசியும் பயனேதும் இல்லாமல் போனது.
போட்டியின் இடைநடுவே தோனி முதுகுப்பிடிப்பு உபாதைக்கு உள்ளானதும் குறிப்பிடவேண்டியது.
நேற்று சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பஞ்சாப் அணிசார்பில் களமிறக்கப்பட்ட கிரிஸ் கெயில் 33 பந்துகளுக்கு 66 ஓட்டங்களையும், கே.எல். ராஹுல் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இவர்களது அதிரடி ஆரம்பம் பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த உதவியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாகூர் மற்றும் தாஹீர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

மும்பாய்க்கு எதிரான முதலாவது போட்டியில் அதிரடியாக சிக்ஸர் மழை பொழிந்து வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ட்வெய்ன் பிராவோவை கடந்த இரு போட்டிகளிலும் தோனி, ஜடேஜாவுக்குப் பிறகே துடுப்பாட அனுப்பி வருவதும் ரசிகர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணி சார்பில் தோனி 79 ஓட்டங்களையும், ராயுடு 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக க்றிஸ் கெயில் தெரிவானார்.
சென்னை அணிக்கு இரண்டு இறுதி ஓவர்கள் வெற்றிக்குப் பிறகு முதலாவது தோல்வி இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...