தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 2 ஏப்ரல், 2018

கராச்சிக்குத் திரும்பிய கிரிக்கெட், பாகிஸ்தான் சாதனை வெற்றி !

கராச்சிக்கு 9 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய சர்வதேச கிரிக்கெட்டின் முதலாவது போட்டியில் சாதனைக்குரிய மாபெரும் வெற்றி கண்ட பாகிஸ்தான்.

143 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய ஓட்டங்களினால் வெற்றி, சர்வதேச அளவில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி.

சர்வதேச T20 போட்டிகளில் இலங்கை அணி கென்யாவுக்கு எதிராகப் பெற்ற 172 ஓட்ட வெற்றியே மிகப்பெரிய சாதனை வெற்றியாகும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கை இது தான்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு அணி பெற்ற குறைவான ஓட்டங்களும் இதுவே தான்.

கராச்சியில் கோலாகலக் கொண்டாட்டம்.
அறிமுக வீரர் ஹுசெய்ன் தலாத் துடுப்பாட்டம் 37 பந்துகளில் 41, பந்துவீச்சு - 1 விக்கெட், களத்தடுப்பு - 3 அபார பிடிகள் என்று கலக்கியிருந்தார்.

அறிமுகப் போட்டியிலேயே சிறப்பாட்டக்காரர் விருதையும் வென்றெடுத்தார்.
நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் - PSL தொடரில் சிறப்பாகப் பிரகாசித்து இந்த அறிமுகத்தைப் பெற்றிருந்தார் தலாத்.

சிறப்பாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடிய இன்றைய ஆடுகளத்தில் ஃபக்கார் சமன், அணித் தலைவர் சப்ராஸ், இறுதியாக வேகமாக அடித்தாடிய ஷொயிப் மலிக் என்போரும் தலாத்துக்குத் துணையாக ஆடி 203 ஆக ஓட்டங்களை உயர்த்தியிருந்தனர்.
எனினும் பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சுருண்டது.
நவாஸ், ஆமிர், ஷொயிப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள்.

3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...