ஐபிஎல் சீசன் 11 இன்னும் சில தினங்களில் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில் இம்முறை விளையாடவுள்ள, இதுவரை கிண்ணம் வெல்லாத டெல்லி அணி முதலாவது ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் இம்முறை டெல்லி அணி திறமையான அணிவீரர்களை உள்வாங்கியுள்ளது. குறிப்பாக அனுபவமான வீரர்களை உள்வாங்கியுள்ளது. கடந்த சீசன்களில் டெல்லி அணி அனுபவம் குறைந்த இளம்வீரர்களை அதிகம் கொண்டிருந்தது. இதனால் இந்திய தேசிய அணியில் துடுப்பாட்ட வீரராகவும், 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராகவும் தன்னை நிரூபித்துக்கொண்ட ராகுல் டிராவிட் பொறுப்பாக இருந்தும் கூட எதுவும் செய்ய முடியாத நிலை, இதுதான் டெல்லி அணியால் அரையிறுதிக்குக் கூட நுழைய முடியாமல் போனது என்றார்கள் டெல்லி ரசிகர்கள்.
2008, 2009 ஆகிய முதலிரு பருவகாலங்கள் தவிர டெல்லி அணியால் முதற்சுற்றை தாண்ட முடிந்தது 2012இல் மட்டும் தான்.
2008, 2009 ஆகிய முதலிரு பருவகாலங்கள் தவிர டெல்லி அணியால் முதற்சுற்றை தாண்ட முடிந்தது 2012இல் மட்டும் தான்.
ஆனால் இம்முறை டெல்லி, முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொன்டிங்கின் பயிற்றுவிப்பு நெறியாள்கையில், அனுபவமான வீரர்களை அணியில் உள்வாங்கியுள்ளது. அந்தவகையில் இந்த சீசனில் விளையாடவுள்ள டெல்லி அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழல் பந்துவீச்சு போன்றவற்றை விரிவாக ஒரு அலசல் பார்ப்போம்.
முதலில் டெல்லி அணியின் துடுப்பாட்டவரிசையை பார்த்தால் மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பியுள்ள, அதுவும் தலைவராக மீண்டுள்ள கெளதம் கம்பீர்,இளைய நட்சத்திரம் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பாண்ட், நமன் ஓஜா இவர்களுடன் அவுஸ்ரேலிய அதிரடி ஆட்டக்காரர் கிளென் மக்ஸ்வெல், நீயூசீலாந்து அதிரடி ஆரம்ப துடுப்பாட்டவீரர் கொலின் மூன்றோ, இங்கிலாந்து அதிரடி ஆரம்ப துடுப்பாட்டவீரர் ஜெசன் றோய் , இவர்களுடன் சகலதுறை அதிரடி ஆட்டகாரர்களான தென்னாபிரிக்காவின் கிறிஸ் மொறிஸ் , அவுஸ்ரேலியவீரர் டானியேல் கிறிஸ்டன் என ஒர் அதிரடி துடுப்பாட்டவரிசையை இம்முறை டெல்லி அணி கொண்டுள்ளது.
டெல்லி அணிக்கு இம்முறை இன்னொரு பலம் தலைமைத்துவம் தான். கடந்த சீசன்களில் டெல்லி அணிக்கு அனுபவம் நிறைந்த நிலையான அணித்தலைவர் இல்லை. ஆனால் இம்முறை டெல்லி அணியின் தலைவராக கெளதம் கம்பீர் செயற்படவுள்ளது. டெல்லி அணிக்கு பெரும் பலம் இக் கம்பீரே கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி இரண்டு முறை கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளார். என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

டெல்லி அணியில் சகலதுறை வீரர்களும் அதிகமாக காணப்படுகின்றனர். தென்னாபிரிக்காவின் கிறிஸ் மொறிஸ், அவுஸ்ரேலியாவின் கிறிஸ்டனும் மக்ஸ்வெல்லும் நீயூசீலாந்தின் கொலின் மன்றோ இவர்களுடன் தமிழகவீரர் விஜய் ஷங்கர், ஜெயந் யாதவ் மற்றும் இம்முறை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலக்கிண்ணப்போட்டியில் கலக்கிய சகலதுறைவீரர் அபிஷேக் ஷர்மாவும் இவ்வணியிலே உள்ளார்.
டெல்லி அணி இம்முறை சிறந்த உலகத்தர வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. குறிப்பாக தென்னாபிரிக்காவின் அண்மைக்கால நட்சத்திரம், உலகின் முதற்தர டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா இம்முறையும் அவர் ஏனைய அணி துடுப்பாட்டவீர்ரகளை பாடாய்ப்படுத்துவார். இவருடன் நீயூசீலாந்தின் வேகப்பொறி ட்ரெண்ட் போல்ட் போதாதுக்கு இந்தியாவின் டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர் முகமட் ஷமியும் சகலதுறை வேகப்பந்துவீச்சாளர்களான கிறிஸ் மொறிஸ். எனவே இந்த சீசனில் டெல்லி வேகத்தில் எதிரணியை விரட்டும். என்பதில் ஜயமில்லை.
டெல்லி அணியில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களும் உள்ளார்கள். இந்திய சுழல் அமித் மிஸ்ரா, ஜெயந் யாதவ், நதீம், குர்தீராட் சிங் இவர்களுடன் சகலதுறை சுழற்பந்துவீச்சாளர் மக்ஸ்வெல்லும் உள்ளார்.
அத்துடன் எல்லோரும் எதிர்பார்த்துள்ள 17 வயது மட்டுமே நிரம்பிய நேபாள அணியின் சுழற்பந்து நட்சத்திரம் லமிச்சேனையும் ஆச்சரியமாக டெல்லி ஏலத்தில் பெற்றுக்கொண்டுள்ளது. இம்முறை உலகக்கிண்ணத் தகுதிகாண் சுற்றிலே அசத்திய இந்த டீன் ஏஜ் வீரர் இந்தியாவின் IPL களத்திலே என்ன சாதிப்பார் என்பதை அறிய எல்லோருமே ஆவலுடன் உள்ளனர்.
எனவே டெல்லி அணி சுழலிலும் மாஜாயாலம் நிகழ்த்தும்.

எனவே கடந்த சீசன்களில் டெல்லி அணி பெற்ற தோல்விகளை சரியான பாடமாக கற்றுக் கொண்டு இம்முறை அணியின் எல்லாக் கட்டமைப்பையும் சரி செய்து இந்த சீசனில் விளையாட உள்ளது. இம்முறையாவது டெல்லி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்காது விடுமா?
எதிர்பார்ப்புகளுடன் ஐபில் 11ஆவது சீசனுக்காக
தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை
எதிர்பார்ப்புகளுடன் ஐபில் 11ஆவது சீசனுக்காக
தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை
0 கருத்துகள்