தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Saturday, March 17, 2018

பங்களாதேஷ் வீரர்களின் வெறியாட்டம் தொடர்பில் ICC விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திரக் கிண்னக் கிரிக்கெட் தொடரின் ஆறாவது T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

போட்டியின் இறுதி  ஓவரின் போது இடம்பெற்ற சில சர்ச்சைகள், குழப்பங்களையடுத்து
ஆர்.பிரேமதாச மைதானத்தில்    தங்கியிருந்த  பங்களாதேஷ் வீரர்கள் தமது ஆத்திரத்தைக் காண்பித்தவேளை  ஓய்வு அறையின் கண்ணாடிக் கதவுகள் மற்றும் தளபாடங்கள்  உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஷ் வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையின் கண்ணாடியிலான கதவுகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஐ.சி.சி ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது அந்த வேளை எடுக்கப்பட்ட காணொளிகள் தரவுகளாக எடுக்கப்படவுள்ளன.
அத்துடன் நேற்றைய மோசமான நடத்தைகளுக்காக பங்களாதேஷ் வீரர்கள் சிலரின் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...