நேற்று இந்தியக் கிரிக்கெட் வாரியத்தினால் இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன.
அணியின் தலைவர் விராட் கோலி உட்பட்ட ஐந்து வீரர்களுக்கு மாத்திரமே புதிதாக அறிவிக்கப்பட்ட A + தர ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
வருடாந்த ஒப்பந்தத் தொகை 7 கோடி இந்திய ரூபாய்கள்.
மூன்று வகைப் போட்டிகளிலும் நிரந்தர இடம்பிடித்த ரோஹித் ஷர்மா, தவான், புவனேஷ் குமார், இவர்களோடு அண்மையில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற ஜஸ்பிரிட் பும்ரா.
இப்போது ஒருநாள் மற்றும் T 20 போட்டிகள் மட்டும் விளையாடும் முன்னாள் தலைவர் தோனி, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடும் அஷ்வின், ஜடேஜா, புஜாரா, சஹா , சிலவேளைகளில் மட்டும் ஒருநாள் சர்வதேச அணிக்கு அழைக்கப்படும் ரஹானே ஆகியோர் 5 கோடி பெறும் A தர ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
தோனிக்கு முதற்தர ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்று சில விமர்சனங்கள் எழுந்தபோதிலும் இந்தப் புதிய A + கடடமைப்பையும் புதிய நடைமுறையையும் உருவாக்கியதே தோனியும் கோலியும் சேர்ந்தே என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத தன்னை A + பிரிவில் சேர்க்கவேண்டாம் என்று தோனியே கேட்டுக்கொண்டதாகத் தகவல்.
இதேவேளை வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி மனைவியைத் தாக்கியது மற்றும் பாலியல் ரீதியிலான குற்றங்கள் தொடர்பாக மனைவியினாலேயே போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதால் BCCI இவருக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
போலீஸ் விசாரணை மற்றும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அடுத்த கட்டம் என்று வாரியம் தீர்மானித்துள்ளது. B தர ஒப்பந்தம் மூலமாக 3 கோடி ரூபாய் வருமானம் பெற வாய்ப்பிருந்தது ஷமிக்கு.
இளையவீரர்கள் பலர் C தரப் பிரிவில் வருடாந்தம் ஒரு கோடி ரூபாய் பெறவுள்ளார்கள்.
முழுமையான ஒப்பந்தப் பட்டியல்கள்...
நன்றி : ESPN Cricinfo
0 கருத்துகள்