IPL 2020 திட்டமிட்டபடி தொடங்க முடியுமா? CSK அணி பற்றி சவுரவ் கங்குலி சந்தேகம்!

 IPL 2020 திட்டமிட்டபடி தொடங்க முடியுமா? CSK அணி பற்றி சவுரவ் கங்குலி சந்தேகம்!



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் தொடரில் மேலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

துபாயில் மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும் சென்னை அணியினர் 13 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுபற்றி பேசியுள்ள, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே திட்டமிட்டபடி பயணிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடருக்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதியானது. சுரேஷ் ரெய்னாவும் அவசர அவசரமாக நாடு திரும்பினார். இதனால், சென்னை அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்குமா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியான தகவலில் சென்னை அணியினருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. 

எத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரியாத நிலையில் சிஎஸ்கேவில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சென்னை அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி தற்போது பேச விரும்பவில்லை. ஐபிஎல் தொடரில் CSK திட்டமிட்டபடி பயணிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் போதுமான நாட்கள் இருக்கின்றன. அதற்குள், நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

சென்னை அணிக்கு நெருக்கமானவரிடம் இருந்து புதுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. “ஆகஸ்ட் 15 முதல் 20 வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாமல் இருந்த ஹர்பஜன் சிங், தற்போது உள்ள சூழ்நிலையில் துபாய் செல்வது கடினம். ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், ஹர்பஜன் சிங் போல, வெளிநாட்டு வீரர்களும் துயாய் செல்வதைத் தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், துபாயில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது. “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஐபிஎல் குழுவினருக்கு கொரோனா பரிதோசனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அணி உரிமையாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல் 28 வரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.”

“அதில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். IPL மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் முடியும் வரை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை