தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

IPL 2020 திட்டமிட்டபடி தொடங்க முடியுமா? CSK அணி பற்றி சவுரவ் கங்குலி சந்தேகம்!

 IPL 2020 திட்டமிட்டபடி தொடங்க முடியுமா? CSK அணி பற்றி சவுரவ் கங்குலி சந்தேகம்!கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் தொடரில் மேலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

துபாயில் மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும் சென்னை அணியினர் 13 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுபற்றி பேசியுள்ள, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே திட்டமிட்டபடி பயணிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடருக்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதியானது. சுரேஷ் ரெய்னாவும் அவசர அவசரமாக நாடு திரும்பினார். இதனால், சென்னை அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்குமா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியான தகவலில் சென்னை அணியினருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. 

எத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரியாத நிலையில் சிஎஸ்கேவில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சென்னை அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி தற்போது பேச விரும்பவில்லை. ஐபிஎல் தொடரில் CSK திட்டமிட்டபடி பயணிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் போதுமான நாட்கள் இருக்கின்றன. அதற்குள், நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

சென்னை அணிக்கு நெருக்கமானவரிடம் இருந்து புதுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. “ஆகஸ்ட் 15 முதல் 20 வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாமல் இருந்த ஹர்பஜன் சிங், தற்போது உள்ள சூழ்நிலையில் துபாய் செல்வது கடினம். ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், ஹர்பஜன் சிங் போல, வெளிநாட்டு வீரர்களும் துயாய் செல்வதைத் தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், துபாயில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது. “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஐபிஎல் குழுவினருக்கு கொரோனா பரிதோசனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அணி உரிமையாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல் 28 வரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.”

“அதில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். IPL மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் முடியும் வரை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பாரபட்சமா? ஏன் நாடு திரும்பினார் சுரேஷ் ரெய்னா?

 சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பாரபட்சமா? ஏன் நாடு திரும்பினார் சுரேஷ் ரெய்னா?சுரேஷ் ரெய்னா எதற்காக நாடு திரும்பினார் என்பது பற்றி அணி நிர்வாகம் சரியான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை. தற்போது  துபாயில் தங்குவதற்கு அளிக்கப்பட்ட அறை திருப்தி அளிக்காததால் தான், சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

மகேந்திரசிங் தோனிக்கு அளிக்கப்பட்டது போன்ற அறையை ரெய்னா கோரியதாகவும், அதற்கு அனுமதி அளிக்காததால் ரெய்னா இந்தியா திரும்பியதாகவும் கூறப்படுகிறது. அவசரவசரமாக ரெய்னா நாடு திரும்பியதும் ஏனைய வீரர்களுடன் தோனி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தவுடன் தனது ஓய்வையும் ரெய்னா அறிவித்திருந்தார்.

எனினும் தோனிக்கு நெருக்கமான வட்டாரங்கள் ரெய்னா கொரோனா பயத்தினாலேயே தாம் சமாதானம் செய்து நிறுத்தியும் நாடு திரும்பியதாக தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

இதேவேளை சென்னை சூப்பர் கிங்க்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா வீணாக தனது சம்பளமான பெருந்தொகையை (இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாவை ) இழக்கப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னா தொடர்ந்து மௌனம் சாதித்துவருவதால் சென்னை ரசிகர்கள் குழம்பியிருக்கிறார்கள்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

இந்தியாவின் அதியுயர் விருதுகள் பெறவிருக்கும் மூன்று ஷர்மாக்களுக்கு BCCI புகழாரம்!

 மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னாஅர்ஜூனா விருதுகள் வழங்கப்படும். சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுத் துறையின் வாழ்நாள் சாதனையாளர் ‘தயான் சந்த்’ விருது வழங்கப்படுகிறது.


இந்த விருதுகளைப் பெறுவதற்கு மொத்தம் மூன்று கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ புகழாரம் சூட்டியுள்ளது.

பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெறும் நான்காவது கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். ஹிட் மேன்...உங்களால் பிசிசிஐ பெருமையடைகிறது” என்று பதிவிட்டுள்ளது.

தீப்தி ஷர்மாவுக்கும் பிசிசிஐ சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அர்ஜூனா விருது பெறவிருக்கும் தீப்தி ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாக்கு, பிசிசிஐ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அர்ஜூனா விருது பெறவிருக்கும் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து வெற்றி நடைபோடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

மற்ற விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் ஷர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


மூத்த கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, வீராங்கனை தீப்தி ஷர்மா, தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மானு பாகேர் ஆகியோர் உட்பட 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது.

விருதுகள் அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இணைய வழி நிகழ்ச்சி மூலம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

IPL 2020 News - ஐபிஎல்: முதல் 3 போட்டிகளில் 29 வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்!

 இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள், டி20 போட்டிகள் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் துபாய்க்கு தாமதமாக  வந்து சேர்வார்கள் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


ஐபிஎல் போட்டியில் காலமதாமதாக களமிறங்கபோகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதிக்கு மேல் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்கள் என பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஏஜஸ் பெளலில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலான காலத்தில் 3 டி20 போட்டிகள் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்ர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி காலத்தில் 3 ஒருநாள் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க உள்ள ஐபிஎல் வீரர்கள், போட்டி முடிந்தவுடன் துபாய் புறப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து குறிப்பிட்ட ஐபிஎல் வீரர்கள் செப்டம்பர் 17, 18 தேதிகளில் துபாய்க்குப் புறப்படுவர்.

துபாய் சென்றடையும் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன்பின் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே சம்பந்தப்பட்ட நபர் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

அதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க உள்ள டேவிட் வார்னர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டீவ் ஸ்மித் உள்பட 29 வீரர்கள் முதல் 3 ஐபிஎல் போட்டிகளை தவறவிட நேரிடும்.

ஜோஸ் பட்லர், ஸ்மித், ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் முதல் 3 போட்டிகளை விளையாட வேண்டிய நெருக்கடி ராஜஸ்தான் ராயல் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் பாதுகாப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி லண்டன் சென்றடைகின்றனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2020

M.S.தோனி ஓய்வு !

 M.S.தோனி ஓய்வு !


இன்றிரவு 7.29இல் இருந்து தன்னை ஓய்வு பெற்ற வீரராகக் கருதிக்கொள்ளுமாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த தோனி ஒருநாள், T20 போட்டிகளில் ஆடி வந்திருந்தார்.
எதிர்வரும் செப்டம்பர் 18 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடவுள்ள தோனி, சென்னையில் இன்று ஆரம்பமான பயிற்சி முகாமில் பங்குபற்றியிருந்தார்.
இந்த அறிவிப்பு மூலம் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலிருந்தும் தோனி ஓய்வு பெறுகிறார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பையடுத்து சில நிமிடங்களிலேயே அவரது தளபதியாகக் கருதப்படும், சென்னை சூப்பர் கிங்ஸில் அவரோடு சேர்ந்து நீண்ட காலம் விளையாடிவரும் சுரேஷ் ரெய்னாவும் தனது சர்வதேச ஓய்வை அறிவித்தார்.Related Posts Plugin for WordPress, Blogger...