தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 30 ஜூன், 2018

இந்தியாவின் சுழலில் மீண்டும் சுருண்டது அயர்லாந்து ! அபாரமான தொடர் வெற்றி.

இந்தியா அயர்லாந்து அணிகள் மோதிய 2 -வது டT20 போட்டியில் அயர்லாந்து அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.


இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று டி20, மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

அதற்கு முன்னதாக, அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரில், இந்திய அணி விளையாடியது. முதல் T20 போட்டியில், 208 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி, 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

இந்நிலையில், இரண்டாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து தலைவர் கரி வில்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

நேற்றைய போட்டியில் தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் லோகேஷ் ராகுல் மற்றும் இந்தியத் தலைவர் வீராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இதில் வீராட் கோலி 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியால் ரன்ரேட் வேகமாக அதிகரித்தது. அப்போது லோகேஷ் ராகுல் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர், ரெய்னாவும் 69 ரன்களில் அவுட்டானார். அடுத்துக் களமிறங்கிய ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் களமிறங்கிய மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இறுதியில் ஹர்திக் பாண்டியா 32 ரன்களும், மணிஷ் பாண்டே 21 ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு 214 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், சித்தார்த் கெளல், பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 இறுதியில் அயர்லாந்து அணி 12.3 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றியானது T20 போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியாகவும், உலகளாவிய ரீதியில் இரண்டாவது பெரிய வெற்றியாகவும் அமைந்துள்ளது.

அத்துடன் இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி பெற்ற குறைவான ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.

தொடரில் 7 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றியிருந்தாலும், 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சஹால் தொடர் நாயகனாகத் தெரிவானார்.

1 கருத்து:

  1. வணக்கம் நண்பரே.. !

    இன்னும் உங்களின் தளங்களிற்கான வருகையாளர்களுக்காக மற்றும் வாசகர்களுக்காக facebook போன்ற சமூகவலைத் தளங்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்களா... வேண்டாம்.. இவை போன்ற சமூக வலைத்தளங்கள் தற்காலிகமானவை. தங்களின் வியாபார உத்தியாக இலாபத்திற்காக எந்த நேரத்திலும் கொள்கைகளை மாற்றி, உங்கள் இணையத்தள வாசகர்களை தடம் மாற்றலாம்.

    ஆகவே இது போன்ற சமூகப்பொறுப்பற்ற தளங்களிலிருந்து வெளிவாருங்கள்.. www.tamilus.com போன்ற தளங்களின் வளர்ச்சிக்கு உதவுதன் மூலம் உங்கள் இணைய வாசகர்களின் இருப்பை உறுதி செய்யுங்கள்.

    நன்றி
    தமிழ்US

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...