தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 15 மார்ச், 2018

ஷகிப் அல் ஹசன் வருகிறார் - பலமடையும் பங்களாதேஷ் உற்சாகம் ! - Nidahas Trophy 2018

பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் இன்று மதியம் இலங்கை வந்தடையவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
படம் : Crictoday

விரல் உபாதை காரணமாக பங்களாதேஷில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்காத ஷகிப் அல் ஹசன், தற்போது குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கெதிரான சுதந்திரக் கிண்ணத்தின் முக்கிய போட்டியில் ஷகிப் அல் ஹசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு அணியை வலுப்படுத்தும் முகமாக ஷகிப் அல் ஹசன் அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே முஷ்பிகுரின் அதிரடியில் இலங்கை கண்ட அதிர்ச்சித் தோல்வியிலிருந்து மீளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷகிப்பின் சுழல்பந்து வீச்சும் தடுமாறிக்கொண்டிருக்கும் பங்களாதேஷின் பந்துவீச்சையும் இன்னும் திடப்படுத்தும் என்பதும் உறுதி.

சுதந்திரக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியிருந்த இலங்கை அணி, அடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...