தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Friday, March 23, 2018

ICC உலக அணிக்குத் தலைவராகும் இங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோர்கன்

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக பதினொருவர் கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்து ஒருநாள் மற்றும் T20 அணியின் தலைவர் ஒயின் மோர்கன் தலைமை தாங்கவுள்ளார்.


எதிர்வரும் 31ஆம் திகதி லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நிதி சேகரிப்பு T20 போட்டியிலேயே, ஒயின் மோர்கன் அணித்தலைவராக செயற்படவுள்ளார்.

எனினும் இந்த 11பேர் கொண்ட உலக கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்களின் பெயர்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. குறித்த அணியின் முழு விபரம் மிகவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு கரீபியன் தீவுகளில் இர்மா, மரியா ஆகிய புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவே இந்த T20 போட்டி நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டிக்கு ICC உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...