ஒக்லாந்து டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணியை ஐந்து வீரர்களை பூஜ்ஜியத்துக்கு ஆட்டமிழக்கச் செய்து, இங்கிலாந்தின் டெஸ்ட் வரலாற்றில் ஆறாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையான 58க்கு தன்னுடைய ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி சுருட்டிய பிறகு இன்று இரண்டாவது நாளில் துடுப்பாட்டம் மூலமாகத் தன்னைத் திடப்படுத்தியுள்ளது நியூசீலாந்து.
எனினும் தலைவர் கேன் வில்லியம்சனின் சதம் மட்டுமே இன்றைய நாளில் குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்து போக மழை பெரும்பாலான பகுதி நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டது.
நியூ சீலாந்துத் தலைவரின் சதம் அவரது 18வது டெஸ்ட் சதமாகும். இது நியூ சீலாந்தின் புதிய சாதனையாக மாறியுள்ளது.
எனினும் தலைவர் கேன் வில்லியம்சனின் சதம் மட்டுமே இன்றைய நாளில் குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்து போக மழை பெரும்பாலான பகுதி நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டது.
நியூ சீலாந்துத் தலைவரின் சதம் அவரது 18வது டெஸ்ட் சதமாகும். இது நியூ சீலாந்தின் புதிய சாதனையாக மாறியுள்ளது.
நியூ சீலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை இன்று படைத்தார் கேன் வில்லியம்சன்.
இது அவரது 18வது டெஸ்ட் சதமாகும்.
இது அவரது 18வது டெஸ்ட் சதமாகும்.
இன்று வரை வில்லியம்சன் முன்னாள் நியூசீலாந்து வீரர், காலஞ்சென்ற மார்ட்டின் குரோ, தற்போதும் ஆடி வரும் முன்னாள் அணித் தலைவர் ரொஸ் டெய்லர் ஆகியோரோடு 17 சதங்களுடன் சமநிலையில் இருந்தார்.
டெய்லர் 84 டெஸ்ட் போட்டிகளிலும், மார்ட்டின் குரோ 77 போட்டிகளிலும் பெற்ற சதங்களை வில்லியம்சன் தனது 64வது டெஸ்டில் இன்று முறியடித்தார்.
நியூ சீலாந்தின் மிகச் சிறந்த வீரராக கேன் வில்லியம்சன் உருவாகிவருகிறார் என்பது உறுதி.
ஆனால் அதற்கு முதல் ஸ்டூவர்ட் ப்ரோட் நேற்று தன்னுடைய முக்கியமான மைல் கல்லான 400 விக்கெட்டுக்களை அடைந்தார்.
டொம் லேத்தம் அவருடைய 400வது விக்கெட்.
400 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரராகவும், 15வது சர்வதேசப் பந்துவீச்சாளராகவும் பெருமை பெற்றார் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்.
நேற்றைய நாள் சௌதீ - போல்ட்டின் நாள்.
இடைவிடாமல் 20.3 ஓவர்களை இருவரும் மாறி மாறி வீசி இங்கிலாந்தை 58 ஓட்டங்களுக்குள் உருட்டிவிட்டார்கள்.
ஒரு கட்டத்தில் இதை விட மோசமாக 27 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்து உலகின் இரண்டாவது மிகக்குறைவான டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கைக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்கும் அபாயத்தில் இருந்த இங்கிலாந்தை 58 வரை அழைத்துப் போனவர் க்ரெய்க் ஓவர்ட்டன்.
9ஆம் இலக்கத்தில் ஆட வந்த ஓவர்ட்டன் 33 ஓட்டங்களைப் பெற்றார்.
முதல் 9 விக்கெட்டுக்கள் சேர்ந்து பெற்ற 27 ஓட்டங்களை விட, பத்தாவது விக்கெட் இணைப்பாட்டம் அதிகமான (31) ஓட்டங்களை சேர்த்தது.
25 வருடங்களுக்குப் பின் இரண்டே பந்துவீச்சாளர்கள் சேர்ந்து ஒரு அணியைத் துவம்சம் செய்திருந்தனர்.
1994இல் வசீம் அக்ரம் & வக்கார் யூனுஸ் இணைந்து இலங்கை அணியை கண்டியில் 71 ஓட்டங்களுக்கு சுருட்டியிருந்தனர்.
நேற்று போல்ட் 32 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இது அவரது மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதி.
சௌதீ நான்கு விக்கெட்டுக்கள் .
இரண்டாம் இன்னிங்சிலும் இதே வேட்டையை தொடர்வார்களா?
இது நியூசீலாந்தில் நடைபெறும் முதலாவது பகல் - இரவு டெஸ்ட் போட்டி (Day - Night Test/ Pink Ball test) என்பது இன்னொரு விசேடம்.
0 கருத்துகள்