தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 11 மார்ச், 2018

ABயின் சதம், சூப்பர் சிக்ஸ் செல்லும் மூன்று அணிகள், குழப்படிகாரன் றபாடா - சுருக்கமாக சில செய்திகள்


3 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் சதம் பெற்றார் AB டீ வில்லியர்ஸ்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று அவர் பெற்றது 22வது டெஸ்ட் சதம்.
படம் : ESPNCricinfo 

காயங்களினால் பல காலம் விளையாடாமல் இருந்த பிறகு களமிறங்கிய டீ வில்லியர்ஸ் 13 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு முதலாவது சதம் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் பெற்றுள்ள 6வது சதம் இது. தென் ஆபிரிக்க வீரர் ஒருவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகப் பெற்ற சத  எண்ணிக்கையும் இதுவேயாகும்.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி  மட்டுமே 6 டெஸ்ட் சதங்களை  அவுஸ்திரேலியப் பந்துவீச்சாளருக்கு எதிராகப் பெற்ற இன்னும் ஒரேயொரு வீரர்.

AB பற்றி கிரிக்கின்போ தந்துள்ள சுவாரசியத் தரவுகள்


--------------------

உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் நேற்றைய போட்டிகளின் பின்னர் ஸ்கொட்லாந்தைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளும் (பிரிவு A) மற்றும் சிம்பாப்வே (ஸ்கொட்லாந்து அடங்கியுள்ள அதே பிரிவு B) அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

இதேவேளை பப்புவா நியூ கினியா (பிரிவு A) முற்றுமுழுதாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

ஏனைய அணிகளுக்கு சிறிய வாய்ப்புக்கள் இன்னமும் இருக்கின்றன.
------------------------
படம் : getty images

தென் ஆபிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழக்கவுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விக்கெட்டுக்களை எடுத்த பின்னர் மோசமான முறையில் வீரர்களை வழியனுப்பிய குற்றத்துக்காகவே றபாடா இந்தத் தடைக்கு ஆளாகியுள்ளார்.
முக்கியமாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ்  ஸ்மித்துடன் இவர் மோதியிருந்த நேரம் உடல் தொடுகையும் அங்கே இடம்பெற்றது என்பதே இவர் மீதான பாரதூரமான குற்றச்சாட்டாகும்.

இப்போது இதற்கு எதிராக தன்னிலை விளக்கத்துடன் மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளும் வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.
காரணம் இவரது மிகக் குறுகிய கிரிக்கெட் வாழ்க்கையில் அடிக்கடி தடைகளையும் தண்டனைகளையும் சந்தித்துள்ளார்.

அடிக்கடி இப்படியான தடைகளை வாங்கிக்கட்டிக்கொள்ளும் குழப்படிகாரப் பையனாகப் பெயரெடுத்து வருகிறார் றபாடா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...