இலங்கை இந்தியா டெஸ்ட் தொடர்: உத்தேச திகதிகள் வெளியீடு!
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் ஒரு பகுதியாக அமையவுள்ள இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக, ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உத்தேசமாகத் தெரிவு செய்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக்கிற்கு பின் மோதல்: இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரானது ஆகஸ்ட் 9 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்தத் தொடர் முடிந்த கையோடு இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், போட்டிகள் நடைபெறும் துல்லியமான திகதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
டி20 தொடருக்கு வந்த சிக்கல்?
இதேவேளை, 'டிட்வா' சூறாவளியினால் (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் நோக்கில், இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரொன்றை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இந்திய அணியின் சர்வதேச போட்டி அட்டவணைகள் மிகவும் நெருக்கமாக காணப்படுவதால், இந்த டி20 தொடர் நடைபெறுமா என்பதில் இன்னும் நிச்சயமற்ற தன்மையே நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்