Latest Updates

6/recent/ticker-posts

4வது முறையாக உலகக்கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி !!

அவுஸ்திரேலிய மகளிர் அணி தங்களுடைய நான்காவது உலக T20 கிண்ணத்தைத் தனது வசப்படுத்தியுள்ளது.

இந்திய, இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

னநாயகி சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி   19.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
டானியல் வியாட் 43 ஓட்டங்களை எடுத்தார்.

106 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் அவுஸ்திரேலியா அணி  களம் இறங்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட  வீராங்கனைகள் அலிஸ்ஸா ஹீலி (22) மற்றும் மூனே (14) சிறப்பான தொடக்கம் கொடுக்க,
அதன்பின் வந்த கார்ட்னெர் 33 ஓட்டங்களையும்  அணித்தலைவி மெக் லானிங் 28 ஓட்டங்களையும் பெற 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா  அபார வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தை மீண்டும் வசப்படுத்திக்கொண்டது.


ஆஷ்லே கார்டனர் பந்துவீச்சிலும்  சிறப்பாகப் பிரகாசித்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இவரே போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவானார்.
தொடரின் சிறந்த வீராங்கனையாக அலிஸ்ஸா ஹீலி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம்  அவுஸ்திரேலியா 4-வது முறையாக உலக டி20  கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.கடைசியாக  நடந்த 5  தொடர்களில் அவுஸ்திரேலிய அணி 4 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2016இல் அவுஸ்திரேலிய மகளிர் அணி இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியுடன் தோல்வி கண்டிருந்தது.
இம்முறை அந்த அணியை அரையிறுதியில் தோல்வியடையச் செய்திருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்