முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் துடுப்பாட்டத்தில் அசத்திய இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதற்தடவையாக முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இதன்மூலம் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்துவந்த அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின் தள்ளியுள்ளார்.
2011ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தரப்படுத்தலில் முதலாமிடம் பெற்றதன் பின்னர் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடம் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 149 மற்றும் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட விராட் கோலி இதுவரை காலமும் டெஸ்ட் தரப்படுத்தலில் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்த இந்திய வீரரான சுனில் கவாஸ்கரின் (911) சாதனையையும் தாண்டியுள்ளார்.
இப்போது விராட் கோலி 934 புள்ளிகளுடன் டெஸ்ட்டில் முதலாமிடத்தில் உள்ளத்துடன், ஒருநாள் தரப்படுத்தலிலும் முதலாமிடத்தில் இருந்து வருகிறார்.
பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக ஒரு வருடத் தடைக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
0 கருத்துகள்