முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமும் அரைச்சதமும் பெற்று டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் முதலாம் இடத்துக்கு உயர்ந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சக இந்திய துடுப்பாட்ட வீரர்களோடு சேர்ந்து கோலியும் தடுமாறியதை அடுத்து அந்த முதலாமிடத்தை மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்திடம் பறிகொடுத்துள்ளார்.
கோலி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 23 மற்றும் 17 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார்.
இதனால் 15 புள்ளிகள் குறைந்து கோலி மீண்டும் ஸ்மித்துக்கு கீழே சென்றுள்ளார்.
இதேவேளை 93 ஓட்டங்களை இரண்டாம் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொண்ட இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் பெயர்ஸ்டோ 9 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா சார்பாக இந்த டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் கூடிய ஓட்டங்களைப் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அதன் மூலம் சகலதுறை வீரர் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
பங்களாதேஷின் டெஸ்ட் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் தொடர்ந்தும் முதலாமிடத்தில் உள்ளார்.
இதேவேளை லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய இங்கிலாந்தின் ஜிம்மி அண்டர்சன் தரப்படுத்தல்களில் உச்சக்கட்டப் புள்ளிகளாகக் கருதப்படும் 900 புள்ளிகளைத் தாண்டினார்.
900 புள்ளிகளை மேவிய 7வது இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துப் பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற உயர்வான தரப்படுத்தல் புள்ளிகளையும் பெற்றுள்ளார்.
500 விக்கெட்டுக்களைப் பெற்ற முதலாவது இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையைத் தன் வசப்படுத்தியுள்ள அண்டர்சன், இன்னும் 10 விக்கெட்டுக்களை எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த சாதனையைத் தனது வசம் வைத்துள்ள கிளென் மக்ராவின் சாதனையை எட்டிப்பிடிப்பார்.

0 கருத்துகள்