ஐபிஎல் தொடரில் சென்னை அணி கிண்ணத்தை வெல்வதற்கு காரணம் அணியின் தலைவர் தோனிக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது தான் என டெல்லிக்காக விளையாடிய கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கிண்ணத்தை வென்று தந்த வெற்றித் தலைவராக கெளதம் கம்பீர், டெல்லி அணிக்கு இம்முறை தலைவராகப் பதவியேற்றார். ஆனால் அவரால் தலைவராகவோ, சாதாரண துடுப்பாட்ட வீரராகவோ எந்த விதத்திலும் ஜொலிக்க முடியவில்லை.
தொடர்ந்த அழுத்தத்தின் காரணமாக தன் தலைமைப் பொறுப்பை துறந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைவரானார். அதன் பின்னர் கம்பீர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
IPL போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில்,
கம்பீர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் ஐபிஎல் உரிமையாளர்களை விமர்சித்துள்ளார்.
அதிக பணம் புழங்கும் தொழிலாக ஐபிஎல் மாறியுள்ளது. வீரர்கள், ஊழியர்களை பல கோடிகள் கொடுத்து வாங்கும் அணி உரிமையாளர்கள் தங்களின் தொழிலில் ஜொலித்து வருகின்றனர். தொழிலைப் போலவே ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற நினைக்கின்றனர்.
அதனால் அணி நிர்வாகத்தை தாண்டி மைதானத்தில் பெறும் வெற்றி, தோல்வியில் தலையிடுகின்றனர். வீரர்களால் உரிமையாளர்களை குறை கூற முடியுமா?
தோனியால் சென்னை வெற்றி பெற்றது ஏன்?
சென்னை அணியில் உரிமையாளர்களின் தலையீடு இல்லை. தோனி தான் அவர்களுக்கு எல்லாமே. அணி குறித்து தோனி என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் முடிவு. தோனி முடிவில் உரிமையாளர்கள் தலையிடுவதில்லை. தோனி தான் சென்னை அணிக்கு பாஸ். அவர் கிட்டத்தட்ட கடவுள் மாதிரி. அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் தான் அந்த அணி வெற்றி ரகசியமாக இருக்கிறது என கம்பீர் தெரிவித்துள்ளார்.
தனக்கு கொல்கத்தாவில் வழங்கப்பட்ட சுதந்திரம் அளவுக்கு டெல்லியில் வழங்கப்படவில்லை என்பதையே மறைமுகமாக கம்பீர் சாடியுள்ளார் என நம்பப்படுகிறது.

0 கருத்துகள்