Latest Updates

6/recent/ticker-posts

சதத்துடன் 8 ஆட்டமிழப்புகள் — லிட்டன் தாஸின் புதிய உலக சாதனை!

 சதத்துடன் 8 ஆட்டமிழப்புகள் — லிட்டன் தாஸின் புதிய உலக சாதனை!



துடுப்பாட்டத்தில் சதம்… விக்கெட் காப்பில் உலக சாதனை! பங்களாதேஷின் லிட்டன் தாஸ், ஜொஹன்னஸ்பேர்க் டெஸ்டில் அசத்தியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 6 பிடிகள், 2 ஸ்டம்பிங் என 8 ஆட்டமிழப்புகளை ஏற்படுத்தி, டெஸ்ட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஐந்து விக்கெட் காப்பாளர்கள் பகிர்ந்திருந்த 7 ஆட்டமிழப்புகள் என்ற சாதனையை அவர் முறியடித்தார்.

ஏற்கெனவே பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸில் 179 பந்துகளில் 120 ஓட்டங்கள் குவித்த லிட்டன், ஒரே டெஸ்டில் சதமும் ஓர் இன்னிங்ஸில் 8 ஆட்டமிழப்புகளும் பதிவு செய்த முதல் விக்கெட் காப்பாளராகவும் தனித்துவம் பெற்றுள்ளார்! 🔥

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரே டெஸ்டில் சதம், அரைச்சதம் மற்றும் 9 ஆட்டமிழப்புகளுடன் அசத்தியவர், இப்போது மற்றுமொரு வரலாறு படைத்திருக்கிறார்.

துடுப்புடனும் கையுறைகளுடனும் — லிட்டனின் சாதனைப் பயணம் தொடர்கிறது! 👏

கருத்துரையிடுக

0 கருத்துகள்