Latest Updates

6/recent/ticker-posts

IPL 2026: ஒரு இடத்திற்கு 5 அணிகள் மோதல்! CSK தோல்வியால் Play Off போட்டியில் அதிரடி திருப்பம்!

 IPL 2026: ஒரு இடத்திற்கு 5 அணிகள் மோதல்! CSK தோல்வியால் Play Off போட்டியில் அதிரடி திருப்பம்!


நடப்பு IPL 2026 தொடரின் Playoffs சுற்றை நோக்கிய பயணம் தற்போது மரண மாஸ் விறுவிறுப்பை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்ற அதிரடி வெற்றியின் மூலம், எஞ்சியிருக்கும் ஒரேயொரு இடத்தைக் கைப்பற்ற 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், சென்னை அணி நிர்ணயித்த 181 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியைத் தன்வசப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 47 பந்துகளில் 70 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசன் 26 பந்துகளில் 47 ஓட்டங்களையும் விளாசினர். முன்னதாக பந்துவீச்சில் மிரட்டிய பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 16 புள்ளிகளுடன் அதிகாரப்பூர்வமாக Play Off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


Play Off சுற்றை உறுதி செய்த 3 அணிகள்:

  1. ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): 13 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் Play Offஐ உறுதி செய்துள்ளது.

  2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): நேற்றைய வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் Play Off சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  3. குஜராத் டைட்டன்ஸ் (GT): ஹைதராபாத் அணியின் வெற்றியினைத் தொடர்ந்து, 16 புள்ளிகளைப் பெற்றுள்ள குஜராத் அணியும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.

குறிப்பு: மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளன.


அந்த 4-வது இடத்தைக் கைப்பற்றப் போகும் 'அந்த' ஒரு அணி எது?


தற்போது எஞ்சியுள்ள ஒரேயொரு இடத்திற்காக 5 அணிகள் பந்தயத்தில் உள்ளன. அந்த அணிகளின் தற்போதைய நிலை இதோ:

  • பஞ்சாப் கிங்ஸ் (PBKS): 13 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் அணி, தங்களது கடைசிப் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். அத்துடன் மற்ற அணிகளின் போட்டி முடிவுகளும் இவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும்.

  • சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): நேற்றைய தோல்வியால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சிஎஸ்கே, 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் உள்ளது. கடைசிப் போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெறுவதுடன், சிறந்த ரன் ரேட்டைப் பேண வேண்டிய கட்டாயத்தில் தோனியின் படை உள்ளது.

  • டெல்லி கப்பிட்டல்ஸ் (DC): 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் உள்ள டெல்லி அணிக்கும் இன்னும் ஒரேயொரு போட்டியே மீதமுள்ளது.

  • ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR): 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் கைவசம் உள்ளன. இதனால் அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற்று உள்ளே நுழைய இவர்களுக்கு அதிக வாய்ப்பு காணப்படுகிறது.

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR): 12 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் உள்ள கேகேஆர் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன. எனினும், அவர்களால் அதிகபட்சமாக 15 புள்ளிகளை மட்டுமே பெற முடியும் என்பதால் மற்ற அணிகளின் ரன் ரேட்டைப் பொறுத்தே இவர்களின் வாய்ப்பு அமையும்.

சென்னை அணி நேற்றைய போட்டியில் தோற்றாலும் தொடரிலிருந்து இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. இதனால் வரப்போகும் இறுதி லீக் போட்டிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு அனல் பறக்கும் விருந்தாக அமையப் போவது உறுதி!

கருத்துரையிடுக

0 கருத்துகள்