தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 26 செப்டம்பர், 2020

ஆப்கான்- நியூஸிலாந்து அணிகளுடனான தொடர்கள் ஒத்திவைப்பு: கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவிப்பு !

 ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக, கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.



ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரிலும் அவுஸ்ரேலிய அணி விளையாடுவதாக இருந்தது.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்திற்கொண்டு குறித்த போட்டித் தொடர்களை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிரிக்கட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

எனினும், இத்தொடர்களை நடத்துவதற்கான மாற்று திகதி தெரிவு செய்வதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் சபைகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கிரிக்கட் அவுஸ்ரேலியா குறிப்பிட்டுள்ளது.

டெல்லிக்கு அசத்தலான வெற்றி - சென்னைக்கு தொடர்ச்சியான தோல்வி #CSKvDC #IPL2020

 இளைய வீரர்களின் அதிரடி துடுப்பாட்டம், அசத்தலான பந்து வீச்சினால் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.



சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. 

நாணய சுழற்சியில் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். பிரித்வி ஷா அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ஓட்டங்கள் அடித்தது.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்தது. பிரித்வி ஷா 64 , தவான் 35. 



ரிஷப் பண்ட் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ஓட்டங்கள், வொட்சன் 14 ஓட்டங்கள் என்று ஆட்டமிழந்தனர். டூ பிளசிஸ், கேதார் ஜாதவ் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 50 ஓட்டங்கள் சேர்த்தது.

ஜாதவ் 26 க்கும் டூ பிளசிஸ் 43 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. டோனி மீண்டும் தடுமாறியிருந்தார். ஓட்டங்களை வேகமாகப் பெறவேண்டிய நேரத்தில் 15 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.


டெல்லியின் அதிவேக தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்கள் றபாடா & நோர்ட்ஜே 

டெல்லி அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தியது. பீல்டிங்கும் சிறப்பாக செய்தது. இதனால் சென்னை அணி ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை.

இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் - ப்ரித்வி ஷா 

பந்துவீச அதிக நேரம் - விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபா அபராதம் ! #RCB #IPL2020


 

ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக தலைவர் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன், பெங்களூரு அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலாவதாகவும், பெங்களூரு அணி 2ஆவதாகவும் பேட்டிங் செய்தன.
இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீச பெங்களூரு அணி அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக அணியின் தலைவர் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

சச்சின் சாதனையை முறியடித்த K.L.ராகுல்!! #KXIPvRCB #IPL2020

 ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து கே. எல்.ராகுல் முதலிடத்தை பிடித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழும் கே.எல்.ராகுல், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக 

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக சதம் அடைத்து அசத்தியதுடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றையும் அவர் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆறு சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 63 இன்னிங்ஸில் 2,000 ரன்களை கடந்து குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வந்தார். சச்சினின் இந்த சாதனையையே கே.எல். ராகுல் தற்போது முறியடித்துள்ளார்.


பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டி, கே,எல், ராகுலுக்கு 60 ஆவது ஆட்டமாக அமைந்தது. இந்த போட்டியில் சதமடைத்ததன் மூலம் அவர் 2,000 ரன்களை கடந்தார். அத்துடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சினை பின்னுக்குத்தள்ளி ராகுல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.


குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை கடந்த முதல் 5 இந்திய வீரர்கள்:

கே.எல் ராகுல் (60), சச்சின் டெண்டுல்கர் (63), கௌதம் காம்பீர் (68), சுரேஷ் ரெய்னா (69), வீரேந்திர சேவாக் (70)

வியாழன், 24 செப்டம்பர், 2020

தோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்! #CSK #IPL2020

 ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக 217 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி 7ஆவது வீரராக களம் கண்டார். அவர் முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் எனப் பலர் விமர்சித்து வந்த நிலையில், அந்த வரிசையில் கெவின் பீட்டர்சனும் இணைந்துள்ளார்.


மிகப்பெரிய இலக்கைத் துரத்தி தோல்வி கண்டது எல்லாம் போட்டிகளில் இயல்பாக நடக்கக்கூடிய விஷயம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக தோனி 7ஆவது வரிசையில் களம் கண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிக விமர்சனங்களையும் அது பெற்றுத்தந்தது. தோனியின் இந்த முடிவுக்கு விரேந்திர சேவாக் 10க்கு 8 மதிப்பெண்கள் கொடுத்த நிலையில், கெவின் பீட்டர்சனும் தனது மதிப்பீடுகளை வழங்கியுள்ளார். டி20 போட்டிகளில் 217 ரன்களை துரத்தி வெற்றி பெறுவது சாதாரணம் கிடையாது. ஆனால், தோனி இதை அசால்டாக எடுத்துக் கொண்டு 7ஆவது வரிசையில் களம் கண்டது ஏற்கதக்கத்து அல்ல என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.


“தற்போது ஐபிஎல் தொடர் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. அதனால், தோனி எடுத்த முடிவை ஒரு பரிசோதனையாகப் பார்க்கலாம். ஒன்னு மட்டும் சொல்றேன், டி20 கிரிக்கெட் கண்ணிமைக்கும் நேரத்தில் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியது. என்ன நடந்தது என்று ஆராய்வதற்குள் அடுத்தடுத்து 5 தோல்விகள் வரிசை கட்டி நிற்கும். இது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கூடப் பறித்துவிடும். தோனி எடுத்த முடிவைப் போன்று நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன்” என தனியார் தொலைக்காட்சியில் கிரிக்கெட் தொடர்பாக பேசும்போது பீட்டர்சன் கூறினார்.


ராஜஸ்தானுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி ! #RajasthanRoyals #IPL2020

 ராஜஸ்தானுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி ! #RajasthanRoyals #IPL2020

தற்போது நியூசீலாந்தில் தனது சுகவீனமுற்றுள்ள தந்தையாரோடு இருக்கும் இங்கிலாந்தின் சகலதுறை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் அடுத்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம் வந்து சேருவார் என்றும், Rajasthan Royals அணிக்காக அடுத்த வாரம் முதல் போட்டிகளில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டோக்ஸ் இல்லாமலேயே முதலாவது போட்டியில் ராஜஸ்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிகொண்டிருந்தது.


Related Posts Plugin for WordPress, Blogger...