தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 22 நவம்பர், 2018

கோலியின் சாதனையை முறியடித்த தவான் !

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய T20 போட்டியில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீக்கார் தவான், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

பிரிஸ்பேனில் நேற்று  நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் T 20 போட்டியில் இந்தியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ஷீக்கார் தவான் அதிரடியாக 42 பந்துகளில் 76 ஓட்டங்களை சேர்த்தபோதும் அது அணியின் வெற்றிக்கு உதவாமல் போனது.

இருப்பினும் அவரது இந்த ஆட்டம் அணித்தலைவர் விராட் கோலியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.

T 20 வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் 641 ஓட்டங்களுடன் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார்..

இவர் இந்தச் சாதனையை 2016ம் ஆண்டு படைத்திருந்தார். தற்போது ஷீக்கார் தவான் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

தவான் இந்த ஆண்டில் இதுவரை 648 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் ஃபக்கர் சமான் 576 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும்,

ரோஹித் ஷர்மா 567 ஓட்டங்களுடன்  நான்காவது இடத்திலும் உள்ளனர்.

எனினும் ரோஹித் ஷர்மா இன்னொரு முக்கிய சாதனையை நாளை நிகழ்த்தக்கூடிய வாய்ப்புள்ளது.
T 20 சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய மொத்த ஓட்டங்களை பெற்றவருக்கான சாதனையே அதுவாகும்.

நியூ சீலாந்து அணியின் மார்ட்டின் கப்டில் வசமுள்ள சாதனையை நாளை ரோஹித் ஷர்மா முறியடிக்க இன்னும் 65 ஓட்டங்களைப்  பெறவேண்டியுள்ளது.
நாளை அவர் formகுத் திரும்பி அதை முறியடிப்பார் என இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...