தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 10 நவம்பர், 2018

பாகிஸ்தானுக்கு அசத்தல் வெற்றி !! தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி !!

இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 6
விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-1 என 3 போட்டிகள் கொண்ட தொடரை சமப்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தோல்வியுற்றிருந்த பாகிஸ்தான் அணி இவ்வெற்றியின் மூலம் அதற்கொரு முற்றுப் புள்ளியை வைத்துள்ளது.

நேற்று  நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் பெற்றிருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் ஷஹீன் அப்ரிடி நான்கு விக்கெட்டுகளையும் ஹஸன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

210 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக 54 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் லுக்கி பேர்குசன் வீசிய பௌன்சர் பந்து இமாம் உல் ஹக்கின் முகத்தை பதம் பார்த்ததன் விளைவாக அவர் மருத்துவ உதவிகளுக்காக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இப்போது அவர் நலமே இருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.

தொடர்ந்து பகர் சமான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தது. வெற்றிக்கு மேலும 55 ஓட்டங்கள் மாத்திரம் பெற வேண்டிய நிலையில் பக்கர் சமான் 88 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதே ஓவரில் பபார் அசாம் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் தொடர்ந்து களமிறங்கிய மொஹமட் ஹஃபீஸ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணியின் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


40.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது பாகிஸ்தான் அணி. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் லுக்கி பேர்குசன் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக ஷஹீன் அப்ரிடி தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி நாளை (11) நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...