தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 9 ஏப்ரல், 2018

வெற்றியோடு ஆரம்பித்த கொல்கத்தாவின் புதிய பயணம் ! - #IPL2018 #KKRvRCB

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

சுனில் நரைனின் அதிரடித் துடுப்பாட்டம் மற்றும் நிதிஷ் ராணாவின் சகலதுறை சாகசம் ஆகியவற்றின் உதவியோடு தினேஷ் கார்த்திக்கின் தலைமையில் முதல் தடவையாகக் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலாவது போட்டியிலேயே வெற்றியைப் பதிவு செய்தது.

நேற்று இரவு நடைபெற்ற IPL 2018இன்  மூன்றாவது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி மெக்கலம் மற்றும் வில்லியர்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 176 ஓட்டங்களை குவித்தது.
வில்லியர்ஸ் 23 பந்துகளுக்கு முகம் கொடுத்து 44 ஓட்டங்களையும், மெக்கலம் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் விராட் கோலி 31 ஓட்டங்களைப் பெற 33 பந்துகளை வீணாக்கிக்கொண்டார்.
பந்து வீச்சில் நிதிஷ் ராணா மற்றும் வினய் குமார் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுனில் நரைனின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 18.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அதிரடியாக ஆடிய சுனில் நரைன் 19 பந்துகளில் 50 ஓட்டங்களை விளாச, மறுமுனையில் தினேஸ் கார்த்திக் நிதானமாக ஆடி 35 ஓட்டங்களையும், நிதிஷ் ரானா 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

நரைன் தன்னுடைய அரைச்சதத்தினை 17 பந்துகளில் பெற்றிருந்தார்.
கடந்த வருடம் இதே பெங்களூர் அணிக்கு எதிராக 15 பந்துகளில் நரேன் அரைச்சதம் பெற்று IPL இல் சாதனை படைத்திருந்தார்.
எனினும் நேற்று பிற்பகல் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப்பின் லோகேஷ் ராகுல் இந்த சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக சுனில் நரைன் தெரிவுசெய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...