ஆசியக் கிண்ணத் நேற்றைய இலங்கை - பங்களாதேஷ் ஆட்டத்தின் போது பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் காயமடைந்தார்.சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் மணிக்கட்டில் பந்து பட்டதால், வலியில் துடித்த அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். பின்னர் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் பங்களாதேஷ் விக்கெட்டுக்கள் 9 இழக்கப்பட்ட பின்னர் இக்பால் மீண்டும் களமிறங்கினார். அப்போது அவர் ஒற்றைக் கையால் மட்டுமே தடுத்து ஆடினார். அத்துடன் முஷ்பிகுர் ரஹீம் சதமடித்து பங்களாதேஷ் பெரிய ஓட்ட எண்ணிக்கை பெறுவதற்கும் உதவியிருந்தார்.
இதனால் தமிம் இக்பாலுக்கு முன்னாள் வீரர்கள் பலரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளையில் தமிம் இக்பால் சிறப்பான formஇல் இருக்கும் நேரத்தில் உபாதையடைந்திருப்பது பங்களாதேஷ் அணிக்குப் பெரும் இழப்பாகக்கருதப்படுகிறது.

0 கருத்துகள்