றபாடா உபாதை - மூன்று மாதம் ஓய்வு - IPL இல் விளையாட மாட்டார்

அவுஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் வதம் செய்து தென் ஆபிரிக்காவின் தொடர் நாயகனாக விருது பெற்ற வேகப் புயல் ககிஸோ றபாடா உபாதைகள் காரணமாக மூன்று மாத கால ஓய்வு பெற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.


இதனால் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார். டெல்லி டெயார்டெவில்ஸ் அணிக்காக பெருந்தொகைக்கு (4.2 கோடி இந்திய ரூபாய்) றபாடா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். டெல்லி அணிக்கு இது பெரும் இழப்பாக அமையவுள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டியில் இவரது உடல்நிலை பற்றி சந்தேகம் வெளியிடப்பட்ட போதிலும் தான் வீசிய 8 ஓவர்களையும் சிறப்பாகப் பந்துவீசியிருந்தார்.

அவுஸ்திரேலியத் தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த றபாடா, தென் ஆபிரிக்காவின் அடுத்த சர்வதேசத் தொடராக அமையவுள்ள இலங்கை சுற்றுலாவுக்கு உடற்தகுதி பெற்றுவிடுவார் என நம்பப்படுகிறது.


வ.சோழன் - யாழ்.நல்லூர்

கருத்துரையிடுக

புதியது பழையவை