Latest Updates

6/recent/ticker-posts

தென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு டெஸ்ட் குறைந்தது

இலங்கைக்கான தென் ஆபிரிக்க அணியின் கிரிக்கெட் விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ளது தென் ஆபிரிக்கா.


எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வருவதாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தாலும் 2013 முதலே இலங்கைக்கான தென் ஆபிரிக்கத் தொடர்கள் பிற்போடப்பட்டு அல்லது ரத்துச் செய்யப்பட்டு வருவது வழக்கமாகி வந்ததால் ஒரு சந்தேகம் இருந்தது.

இம்முறையும் அப்படியே ஆகிவிடுமோ என்ற சந்தேகம் இருந்தாலும், சிறிய ஒரு மாற்றத்துடன் தென் ஆபிரிக்க சுற்றுலா உறுதியாகியுள்ளது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இருந்தது இப்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரு T20 சர்வதேசப் போட்டி கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தவிர வேறு எந்த அணிகள் இலங்கைக்கு விஜயம் செய்தாலும் அவை SLC - ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு நஷ்டத்தையே தருவதாலேயே ஒருநாள் மற்றும் T20 சர்வதேசப் போட்டிகளையும் சேர்த்துக்கொள்வதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த நடவடிக்கையே இது என்று சொல்லப்படுகிறது.

 இறுதியாக தென் ஆபிரிக்கா இலங்கைக்கு 2014 ஆம் ஆண்டு வருகை தந்தபோது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை 2-1 என்றும் வென்றெடுத்தது.

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஜூன் மாதம் செல்லவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்