33 சிக்ஸர்கள் மழையாகப் பொழிந்த நேற்றிரவில் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் தோனி எடுக்கும் finisher எடுத்து அசத்தலான சிக்ஸர் ஒன்றோடு போட்டியை வென்று கொடுத்திருந்தார்.
சென்னை அணிக்கு ஐந்தாவது வெற்றி. மீண்டும் ஒரு இறுதி ஓவரில் வெற்றி. 200 ஓட்டங்களுக்கு மேல் பெற்றாலும் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் துரத்தியடிக்கலாம் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.
South Indian Derby என்று வர்ணிக்கப்பட்ட சென்னை - பெங்களூரு போட்டிக்கு முன்னதாக இந்தியாவின் முன்னாள் தலைவர் தோனியும் இந்நாள் தலைவர் விராட் கோலியும் கட்டித் தழுவிக்கொள்ளும் காட்சி அனைவரையும் நெகிழவைத்த ஒன்று.
ஹர்பஜன் சிங், தாஹிர் அனுபவமிக்க சுழல்பந்து வீச்சாளர்களை மீண்டும் சென்னை அணிக்குள் கொண்டுவந்தது.
றோயல் சல்லெஞ்சர்ஸ் தென் ஆபிரிக்க ஜோடி டீ கொக் - டீ வில்லியர்ஸின் அபார, அதிரடி சத இணைப்பாட்டம் மூலமும் பின்னர் மந்தீப் சிங்கின் விரைவான ஒட்டக குவிப்பு மூலமாகவும் 205 ஓட்டங்களைப் பெற்றது.
கடைசி நேரத்தில் சென்னையின் களத்தடுப்பும் யுக்தியான பந்துவீச்சும் இன்னும் 15 ஓட்டங்களையாவது கட்டுப்படுத்தியது.
ஏபி டீ வில்லியர்ஸ் - 8 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் 68.
டீ கொக் - 4 சிக்ஸர்களுடன் 37 பந்துகளில் 53
மந்தீப் சிங் - 3 சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 32.
205 ஓட்டங்களை வைத்துக்கொண்டு அதனைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறியது பெங்களூரின் பந்துவீச்சு. இந்தப் பருவ காலத்தில் நல்ல பந்துவீச்சாளர்கள் இருந்தும் இந்நிலை தொடர்கிறது.
வொட்சன், ரெய்னா, பில்லிங்ஸ் மற்றும் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக தோனிக்கு முன்னதாக களம் அனுப்பப்பட்ட ஜடேஜா என்று விக்கெட்டுக்களை விரைவாக CSK இழந்தபோதும், மறுபக்கத்தில் அம்பாத்தி ராயுடு நங்கூரம் இட்டுக்கொண்டார்.
ராயுடு இந்த IPL பருவகாலத்தில் மிகச்சிறப்பான துடுப்பாட்ட form இல் இருக்கிறார். எந்த இலக்கத்தில் துடுப்பாட அனுப்பப்பட்டாலும் தடுமாற்றமில்லாமல் அடித்து நொறுக்கிவருகிறார்.
நேற்றைய அரைச்சதம் அவருக்கு போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை பெற்றுத்தராவிட்டாலும் செம்மஞ்சள் தொப்பியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
தலைவர் தோனியோடு சேர்ந்து 101 ஓட்ட இணைப்பாட்டங்கள்.
7 சிக்ஸர்களுடன் தோனி 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70.
செம்மஞ்சள் தொப்பியை வசப்படுத்திய அம்பத்தி ராயுடு 8 சிக்ஸர்களுடன் 53 பந்துகளில் 82.
RCB உடனான நேற்றைய போட்டி தோனி ஆட்டமிழக்காமல் இருந்த 101 ஆவது T20 போட்டியாகும்.
15 பந்துகளில் 40 தேவை என்ற நிலையிருந்தபோதும் கூட ரசிகர்களிடம் இருந்த பதற்றம் தோனியிடம் இருந்திருக்கவில்லை என்று தெரிந்தது.
மிகக்கூலாக ஆனால் சிக்ஸர் சிக்ஸராக அடித்து 2 பந்துகள் மீதமிருக்க சிக்சரோடே போட்டியை முடித்து வைத்தார் finisher.
தோனி ஒரு தனி இன்னிங்சில் பெற்ற கூடிய சிக்ஸர்களும் இவையே.
போட்டியின் சிறப்பாட்டக்காரரும் தோனியே.

0 கருத்துகள்