அடுத்தடுத்த இரண்டு மிக நெருக்கமான தோல்விகளையடுத்து சிம்பாப்வே கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை (அநேகமாக) இழந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 289 ஓட்டங்களைப் பெற்றும் அதனைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் நெருக்கமான தோல்வியைக் கண்ட சிம்பாப்வே, இன்று முழுமையான அந்தஸ்து இல்லாத துணை அங்கத்துவ நாடான ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) வெறும் மூன்று ஓட்டங்களால் தோற்று தனது வாய்ப்பை இழந்தது.
1983ஆம் ஆண்டு முதல் உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிவரும் சிம்பாப்வேக்கு இன்று வெற்றி பெற்றால் நேரடி உலகக்கிண்ண வாய்ப்பு இருந்தது.
இதேவேளை இந்த சூப்பர் சிக்ஸ் சுற்றில் இதுவரை எல்லாப் போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த UAE இன்று பெற்றுக்கொண்ட வெற்றியானது நாளைய தினம் மோதவுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும்அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை வழங்கியுள்ளது.
நாளை வெற்றிபெறும் அணி மேற்கிந்தியத் தீவுகளோடு சேர்ந்து இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெறும்.
எனினும் மழையினால் போட்டி நடக்காமலேயே போனால் NRR அடிப்படையில் அயர்லாந்து தெரிவாகும்.
எனினும் போட்டி அரிதிலும் அரிதான சமநிலையில் (Tie) முடிவு பெற்றால் சிம்பாப்வே அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.
முன்னதாக நேற்று முன் தினமும் இதே போல மிகக் குறைவான - ஐந்து ஓட்டங்களால் ஸ்கொட்லாந்து அணியை வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் தகுதிகாண் சுற்றின் மூலம் தெரிவான முதலாவது அணியாக மாறியிருந்தது.
தோல்வியடைந்து விடுமோ என்ற பதற்றத்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு வழங்கிய போட்டியில் மழையும் DLS மழை விதியும் நடுவரின் ஒரு தவறான தீர்ப்பும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை வழங்கியிருந்தது.
அண்மையில் ஒருநாள் அந்தஸ்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடித்துக்கொண்ட ஸ்கொட்லாந்து அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் மனவுடைவையும் இந்தத் தோல்வி வழங்கியுள்ளது.
இறுதியாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இரு அணிகளுக்கு இடையிலான போட்டி எந்த அணிக்கு குதூகலத்தையும் எந்த அணிக்கு சோகத்தையும் வழங்கப்போகிறதோ?

0 கருத்துகள்