Latest Updates

6/recent/ticker-posts

ஐபிஎல் 2018: ‘Best vs Best’ இந்த சீசனுக்கான பாடல் வெளியீடு #IPL2018

முதல் முறையாக பிசிசிஐ(BCCI) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணைந்து வெளியிட்ட இந்தப் பாடல் பங்கேற்றுள்ள எட்டு அணிகளின் ஸ்டார் வீரர்களின் முக்கிய தருணங்கள் இடம் பெற்றுள்ளன.



மேலும் கடந்த ஆண்டுகளில் ஐபிஎல் ரசிகர்கள் அவர்களது அணிகளை உற்சாகப்படுத்திய முக்கிய நிகழ்வுகளும் பங்கேற்றுள்ளன. இந்தப் பாடலை தென் ஆப்பிரிக்காவின் திரைப்பட இயக்குநர் டான் மேக் இயக்கி இருக்கிறார்.

ராஜிப் வி பால்லா மற்றும் சித்தார்த் பசூர் ஆகியோர் இப்பாடலுக்கு இசையமைந்துள்ளனர்.

இந்தப் பாடல் ஐந்து மொழிகளில் ( ஹிந்தி, தமிழ், பெங்காலி, கன்னடா, தெலுங்கு) பாடப்பட்டுள்ளது . ‘Best vs Best’ என்பதை மையமாகக் கொண்டு இந்த IPL பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ இயக்கு நர் ராகுல் ஜோக்ரி கூறும்போது, "ஐபிஎல் பல அதிரடியான கொண்டாட்டங்களை கொண்டதாக திகழ்கிறது. லட்சக் கணக்கான மக்கள் உலகளவில் இதனை கொண்டாடுகின்றனர்" என்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்