தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Thursday, November 22, 2018

16 பந்துகளில் 74 !! அசத்தல் அதிரடி ஆட்டம் ஆடிய மொஹமட் ஷெசாட்

2வது  T10 லீக் கிரிக்கெட் தொடர்  நேற்று (புதன் கிழமை) ஷார்ஜாவில்  தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் இம்முறை பங்கேற்கின்றன.

இதன் முதல் ஆட்டத்திலேயே அதிரடியான சிக்ஸர் மழையுடன் ஆப்கனிஸ்தானின் மொஹமட் ஷெசாட் களைகட்ட வைத்துள்ளார்.

இதன் முதல் போட்டியில் சிந்திஸ் அணியும்,ராஜ்புத்ஸ் அணியும் மோதியிருந்தன. முதலில் துடுப்பாடிய சிந்திஸ் அணி, 10 ஓவர்கள் முடிவில் அணித்தலைவர் ஷேன் வொட்சனின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக வொட்சன்  20 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசினார்.

இதையடுத்து ராஜ்புத்ஸ் அணி சார்பாக அந்த அணியின் தலைவர் ப்ரெண்டன் மக்கல்லம் மற்றும் மொஹமட் ஷெசாட் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். இருவரும், எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

குறிப்பாக, மொஹமட் ஷெசாட் 16 பந்துகளில்  74 ஓட்டங்கள் குவித்தார். இதில், 8  சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
மறுமுனையில், மக்கல்லம் தனது பங்கிற்கு 8 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். இதில், 2 சிக்சர், 1 பவுண்டரி அடங்கும்.

மொஹமட் ஷெசாட் மற்றும் மக்கல்லம் ஆகியோரின் அதிரடி ஆரம்பத்தினால் 4 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்து ராஜ்புத்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.  மொஹமட் ஷெசாட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...