தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Wednesday, May 2, 2018

இந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து ! அதிர்ச்சி தந்த தரப்படுத்தல்கள்.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் வருடாந்தத் தரப்படுத்தல் மாற்றங்களுக்கு அமைய ஒருநாள் சர்வதேசத் தரப்படுத்தல்களில் இந்தியாவைப் பின் தள்ளி இங்கிலாந்து முதலாமிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்தாண்டு விளையாடிய போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற அடிப்படையில் இங்கிலாந்து 8 புள்ளிகளை மேலதிகமாகப் பெற்று முதலாமிடத்தை வசப்படுத்திக் கொண்டது.
இந்தியா ஒரு புள்ளியை இழந்தது.

கடந்த ஆண்டில் மிக மோசமான பெறுபேறுகளைக் கண்ட அவுஸ்திரேலியாவே மிக மோசமாக 8 புள்ளிகளை இழந்தது. தொடர்ந்து தோல்விகளைக் கண்ட இலங்கை 7 புள்ளிகளையும் மேற்கிந்தியத் தீவுகள் ஐந்து புள்ளிகளையும் இழந்துள்ளன .

பாகிஸ்தான் 6 புள்ளிகளையும், ஆப்கானிஸ்தான் 5 புள்ளிகளையும் சிம்பாப்வே நான்கு புள்ளிகளையும் தமது சிறப்பான ஆட்டங்கள் மூலமாகப் பெற்றுக்கொண்டன.


இதேவேளை T20 சர்வதேசத் தரப்படுத்தல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க, அவுஸ்திரேலியா அடுத்த இடத்திலுள்ளது.
இந்தியா மூன்றாமிடம்.

சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணிகளான இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய அணிகளை முந்தி எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...