தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 11 மார்ச், 2018

இலங்கையின் வம்புச்சண்டை கிரிக்கெட் வீரர் மாணவர்களைத் தாக்கிய குற்றத்துக்காகக் கைது !

படம் : Daily Sports

பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனான  இலங்கை கிரிக்கெட் வீரர் ரம்புக்வெல்ல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.  இவர் இலங்கை அணிக்காக 2 T 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இடையிடையே இலங்கையின் A அணிகள் மற்றும் தெரிவு அணிகளுக்காக சில போட்டிகளில் விளையாடியுமுள்ளார்.

இவர் கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களை இருவரை தாக்கியதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் போதையில் வாகனத்தை ஓட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு சர்ச்சை ஒன்றும் புதிதல்ல.
கடந்த 2016ல் போதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யபட்டார். 2013ல் இலங்கை A அணி சுற்றுலா முடிந்து வருகையில் நிறைபோதையில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்றார் என்றும் இவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...