தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 24 செப்டம்பர், 2020

தோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்! #CSK #IPL2020

 ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக 217 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி 7ஆவது வீரராக களம் கண்டார். அவர் முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் எனப் பலர் விமர்சித்து வந்த நிலையில், அந்த வரிசையில் கெவின் பீட்டர்சனும் இணைந்துள்ளார்.


மிகப்பெரிய இலக்கைத் துரத்தி தோல்வி கண்டது எல்லாம் போட்டிகளில் இயல்பாக நடக்கக்கூடிய விஷயம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக தோனி 7ஆவது வரிசையில் களம் கண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிக விமர்சனங்களையும் அது பெற்றுத்தந்தது. தோனியின் இந்த முடிவுக்கு விரேந்திர சேவாக் 10க்கு 8 மதிப்பெண்கள் கொடுத்த நிலையில், கெவின் பீட்டர்சனும் தனது மதிப்பீடுகளை வழங்கியுள்ளார். டி20 போட்டிகளில் 217 ரன்களை துரத்தி வெற்றி பெறுவது சாதாரணம் கிடையாது. ஆனால், தோனி இதை அசால்டாக எடுத்துக் கொண்டு 7ஆவது வரிசையில் களம் கண்டது ஏற்கதக்கத்து அல்ல என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.


“தற்போது ஐபிஎல் தொடர் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. அதனால், தோனி எடுத்த முடிவை ஒரு பரிசோதனையாகப் பார்க்கலாம். ஒன்னு மட்டும் சொல்றேன், டி20 கிரிக்கெட் கண்ணிமைக்கும் நேரத்தில் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியது. என்ன நடந்தது என்று ஆராய்வதற்குள் அடுத்தடுத்து 5 தோல்விகள் வரிசை கட்டி நிற்கும். இது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கூடப் பறித்துவிடும். தோனி எடுத்த முடிவைப் போன்று நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன்” என தனியார் தொலைக்காட்சியில் கிரிக்கெட் தொடர்பாக பேசும்போது பீட்டர்சன் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...